Nesaganam Player

செவ்வாய், 29 டிசம்பர், 2015

நேசகானம்.

இதயத்தால் இணைவோம்.

     நேசச்சோலையில் நீங்களும் எங்களோடு கைக்கோர்த்து பயணிக்க நாங்கள் வழிகாட்டும் நேசப்பாதை இதோ உங்களுக்காக. தமிழர்களின் கலைமேடையாக அடையாளம் காணப்பட்டுள்ள நேசகாணத்தின் அவதாரங்கள் பல.

நேசகானத்தின் முதல் அவதாரம் – விதை விருட்சமாகிக்கிறது:

     2015 ஆம் ஆண்டில் வாட்ஸ்அப், பேஸ்புக், யூ டியூப், போன்ற சமூக வலைத்தளங்கள் வாயிலாக உலகத்தமிழ் நெஞ்சங்களை நேசத்தால் ஒருங்கிணைத்தது நேசகானம்.

நேசகானம் எனும் ஒரே கூரையின் கீழ் ஒரே குடும்பமாக நேசம் என்ற ஆயுதத்தை பயன்படுத்தி பல ஆக்கப்பணிகளை செய்திருக்கிறது. 500க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை வாட்ஸ்அப் குழுவில் கொண்டு அவர்களால் அவர்களை கொண்டு நேசகானம் பல்வேறு நிகழ்ச்சிகளை சுவைப்பட தொகுத்து நேசகானம் வாட்ஸ்அப் ரேடியோ என்ற பெயர் பெற்றது.

காலையில் பக்தி மாலையில் ஆரம்பித்து இரவில் இரவின் மடியில் வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நேசகான வாட்ஸ்அப் ரேடியோவில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. திரைப்பட பாடல்களோடு கூடவே பல்வேறு நாடுகளில் இருக்கும் உலகத்தமிழர்களின் ஒத்துழைப்போடும், பங்களிப்போடும் நேசகானம் பல பயனுள்ள பதிவுகளை குரல் வடிவில் ஒலிப்பதிவுகளாக்கி வாட்ஸப்பிலும், பேஸ்புக்கிலும் வெளியிட்டுள்ளது. பார்வையற்றவர்களுக்காகவே பல்வேறு பயனுள்ள தகவல்கள் குரல் வடிவில் ஒளிபரப்பப்பட்டுள்ளன.

காலையில் பயனுள்ள பதிவாக காலத்தை வென்றவர்கள், தினம் ஒரு தகவல், இன்றைய சிந்தனை இது போன்ற நிகழ்ச்சிகளும் பின்பு சுவைப்பட சமையல் மற்றும் அழகு குறிப்புகளும், மருத்துவக்குறிப்புகளும், குழந்தை வளர்ப்பு முறைகளும், குழந்தை கதைகள், நகைச்சுவை நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள் என பொழுதுபோக்குடன் கூடிய பயனுள்ள நிகழ்ச்சிகள் பல நேசகான வாட்ஸ்அப் ரேடியோவில் வலம் வந்தன. தினமும் செய்திகளும் குரல் வடிவில் தரப்பட்டன. மேலும் வரலாறு காணாத மழை வெள்ளத்தால் தமிழகம் தத்தளித்த போது குறிப்பாக சென்னையும், கடலூரும் தண்ணீரால் தத்தளித்து கண்ணீர் விட்ட போது நேசகானம் சென்னையிலும், கடலூரிலும் களத்தில் இருப்பவர்களை அலைபேசி வழி தொடர்பு கொண்டு மழை நிலவரங்களையும், வெள்ளத்தால் பாதித்த பகுதிகள் மற்றும் நிவாரணப்பணிகள் குறித்தும் குரல் வடிவில் செய்திகளை சேகரித்து சமூக வலைத்தளங்களில் ஒலிப்பதிவுகளாக வெளியிட்டுள்ளது.

யாரும் முயற்சிக்காத ஓர் வரலாற்று சாதனையாக உலகத்தமிழர்கள் பங்கேற்ற தீபாவளி சிறப்பு பட்டிமன்றம் ஒன்றை ஒலி வடிவில் தயாரித்து தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியாக நேசகானம் வாட்ஸ்அப் ரேடியோ சமூக வலைத்தளங்களில் வெளியிட்டது. பல்வேறு மாவட்டங்களில் உள்ள சிறப்பு மிக்க சாதனையாளர்களையும், பல்வேறு துறைகளில் சாதனை படைத்து கொண்டிருக்கும் அறிஞர் பெருமக்களையும், பேராசிரியர்களையும், மருத்துவர்களையும், மாணவர்களையும் அலைபேசி வழியில் பேட்டி கண்டு அவற்றை ஒலிவடிவில் நிகழ்ச்சிகளாக்கி நேசகானம் வாட்ஸ்அப் ரேடியோ சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளது. இது போன்ற கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் நேசகானத்தில் ஏராளம், தாராளம்............

 

 

 

 

 

 

நேசகானத்தின் அடுத்த அவதாரம் – நேசகான இணைய வானொலி:

     நேசகானம் 2016 ஆம் ஆண்டின் துவக்கத்தில் இணைய வானொலி என்ற தனது அடுத்த அவதாரத்தை எடுத்தது. ஊடகங்களால் அடையாளம் காணாப்படாமல் இருக்கும் பல்லாயிரம் இளம் கலைஞர்களை உலகம் அறிந்திட நேசகானம் தமிழர்களின் கலை மேடை என்ற தாரக மந்திரத்தோடு செயல்படுகிறது. “நாங்க பேசுறோம் நீங்க கேளுங்க” என்ற வாசகத்தை மாற்றி நீங்களும் எங்களோடு பேசுங்க உலகம் உங்களை உற்று நோக்கட்டும் என்ற அடிப்படையில் நேசகான இணைய வானொலி சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மண்ணில் நூற்றுக்கும் மேற்பட்ட உலக தமிழர்கள் ஒன்று சேர ஊடகங்கள் பல அறிந்திட நேசகான இணைய வானொலிக்கான துவக்கவிழா நடத்தப்பட்டு நேசகானம் உலக அளவில் வலம் வந்தது.

வானொலி என்றால் திரைப்பாடல்களும், பொழுதுப்போக்கு அம்ச நிகழ்ச்சிகளும் மட்டும் தான் என்ற நிலையை மாற்றி பல்வேறு வகையில் பயனுள்ள குரல் பதிவுகளை நிகழ்ச்சிகளாக நேசகான இணைய வானொலியின் வழியாக  உலக தமிழ் நெஞ்சங்களை தஞ்சம் அடைகிறது. தென்னிந்திய மொழிப்பாடல்கள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சிகள், பலதுறை சார்ந்த வல்லுநர்களை நேரடியாக பேட்டி கண்டு நிகழ்ச்சியாக்குதல். முகநூல் நெஞ்சங்களை நேசகானத்தில் பங்கு கொள்ள செய்து நிகழ்ச்சிகளாக்குதல் நேசகானத்திற்காக பிரத்யேகமாக உலக அளவில் பல்வேறு நாடுகளிலும் மாவட்ட வாரியாகவும் நிருபர் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களை நியமித்து நேசகான இணைய வானொலி பயனுள்ள புதுமுயற்சியிலான பல்வேறு நிகழ்ச்சிகளை உலகிற்கு வழங்கி வருகிறது...........

 

 

 

நேசகானத்தின் மற்றுமொரு அவதாரம் – நேசக்கரங்கள்:

நேசகானத்தின் மாற்றுமொரு அவதாரமாக நேசக்கரங்கள் என்ற சேவை அமைப்பு இயங்கி வருகிறது. நேசக்கரங்கள் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களோடு இணைந்து மாவட்ட வாரியாக சேவைப்பணிகளை செய்து வருகிறது. 2015 ஆம் ஆண்டில் ஒரு லட்சம் மதிப்பிலான வெள்ள நிவாரண உதவிகளை கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று தொண்டு நிறுவனங்களோடு இணைந்து நிவாரண உதவிகளை செய்தது. இந்த வெள்ள நிவாரண உதவிகளை செய்ததால் நேசகானம் உள்ளம் நெகிழ்ந்தது. இந்த அரிய பணியை செய்ய உலக அளவில் உள்ள நேசகான நெஞ்சங்கள் பலர் நேசத்தோடு கை கோர்த்தனர்.

   

ஒலி உலகில் புதிய சாதனைகள் படைக்க நேசகானம் தீட்டியிருக்கும் திட்டங்கள் :

*      உலகெங்கும் உள்ள ஆர்வலர்களை கொண்டு ஒலி புத்தகங்களை நேசகானம் வெளியிட உள்ளது.

*      தமிழ் மொழியில் நாட்டுடமை ஆக்கப்பட்ட படைப்புகள் நேசகானத்தின் மூலமாக ஒலி ஆவணங்களாக உருவாக்கப்பட இருக்கின்றன.

*      இளம் கலைஞர்களுக்கு அவர்களின் கலைப்பயணத்தின் நுழைவாயிலாக நேசகானம் இருப்பதோடு மட்டுமல்லாமல் இளம் தொழில் முனைவோர்களையும் உலகிற்கு அறிமுகப்படுத்தவுள்ளது.

*      உலகெங்கிலும் இருக்கிற தமிழ் மக்களின் பல்வேறு அமைப்புகள் நேசகானத்தில் நிகழ்ச்சிகள் வழங்க உள்ளன.

*      உலகெங்கும் உள்ள தன்னார்வ சேவை நிறுவனங்கள் பற்றிய  நிகழ்ச்சிகளை நேசகானம் அமைக்கும்.

*      குழந்தைகளுக்காக, மாணவர்களுக்காக, இல்லத்தரசிகளுக்காக என அனைத்து தரப்பினர்களுக்காகவும் நேசகானத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் உலகெங்கும் ஒலி உலா வரும்.

*      விளம்பர ஒலி ஒளி தயாரிப்புகளை நேசகானம் பிரத்யேகமாக மிகக்குறைந்த செலவில் நிறைந்த தரத்தில் செய்து வழங்கும்.

*      பார்வையற்றோர்களுக்காக ஒலி ஆக்கங்களை நேசகானம் தயாரிக்கும்.

*      வாழ்த்து செய்திகள் உலகின் கவனத்தை கவரும் வண்ணமாக நேசகானத்தின் மூலமாக வழங்கப்படும்.

*      நாடகங்கள், பட்டிமன்றங்கள், கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் போன்றவை ஒலி குறுந்தகடுகளாக தயாரித்து வழங்கப்படும்.

நேசம் நிகழ்ச்சி பட்டியல்:

 

 

வ.எண்

தொகுப்பாளர்கள் பெயர்

நிகழ்ச்சி

 

1.    

காரைக்கால்

கே.  பிரபாகரன்

 

பேஸ்புக் ராக்கர்ஸ்

2.

ராகினி பாஸ்கரன்

இசையின் மடியில், நெஞ்சில் நின்ற ராகம்

3.

நெல்லை சுபகலா

அம்பாசமுத்திர அம்மணி,

சொர்க்கமே என்றாலும், ரீல் பெட்டி,

சூப்பர் ஜோடி,

நம்ம ஆளு செம      வாலு, சொல் யுத்தம்,

லாஸ்ட் பெஞ்ச் ராக்கர்ஸ்,

வாட்ஸ்அப் வாட்ச்சிங்

4.

நைஜீரியா நா.சக்திமான்

தமிழா தமிழ் பேசு, பேஸ்புக் ராக்கர்ஸ்,

5.

சவுதி  ஜி.ஐயப்பன்

மெலோடியஸ் கானம்

6.

கத்தார் பாலமுருகன்

கிராமத்து கீதம்

7.

ஏர்வாடி செந்தில் கந்தப்பன்

முத்துக்கள் மூன்று

8.

கோவை விஜிகணைக்ட்

மறக்க முடியாத பாடல்கள்

9.

ஈரோடு வி.ராதா கிருஷ்ணன்

உலகம் இந்தியா தமிழகம்

10.

மதுரை எஸ்.அனுசாத்தப்பன்

காலத்தை வென்றவர்கள்

11.

ஈரோடு கிருஷ்ணவேணி

பெண் மொழிகள்,

என் கேள்விக்கென்ன பதில்

12.

கோவை பத்மா

கல்கியின் பொன்னியின் செல்வன்,

சாரல் பாடும் சங்கீதம்.

13.

ஏஞ்சலினா சின்ட்ரெல்லா ரோஸ்

காலாச்சீ ஃபை,

ஹலோ டாக்டர், பன்மொழி தேன் கிண்ணம்

 

14.

சென்னை பாத்திமாஜீனைத்

சமையல் சாம்பியன், தங்க மீன்கள்,

பியூட்டி ஸ்சுவீட்டி., புத்தகச்சாறு

15.

வேலூர் பிரியா

பொன்வானம்

16.

மதுரை நாகேஸ்வரி

தேன் சிந்துதே வானம்

17.

மதுரை கனிமொழி

கனி ரிதம்

18.

காரைக்குடி பாலாஜி

சிங்கர் கானம்,

சினி பார்வை

19.

துபாய் சையது ஹுசைன்

வலைத்தள உலா

20.

காரைக்கால் சிவசந்திரன் பால்ராஜ்

வலைத்தள உலா

21.

தமிழரசி

பாட்டுக்கோட்டை

 

22.

வேலூர் லதா மோகனவேல்

நூத்துக்கு நூறு

23.

புதுச்சேரி கண்ணன்

அழகான உலகம்

 

24.

கோவை ரவீந்திரன்

நிலா முற்றம்

25.

சிங்கப்பூர் கரிகாலன்

இளைய பூவே

26.

பொள்ளாச்சி முத்துக்குமார்

வானொலி பறவைகள்.

           

 

 

 

                                    

                    

               

               

 

 

 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக